Categories
தேசிய செய்திகள்

கோவாவில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோவாவில் ஜூலை 17ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல மாநிலங்கள் ஊரடங்கு நீட்டித்து வருகின்றனர். அந்த வகையில் கோவாவிலும் இன்று 131 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,848 ஆக உயர்ந்துள்ளது. இன்னிலையில் கோவா மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் 19ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும்கூட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் இன்றி விளையாடுவதற்கும், மத வழிபாட்டுத் தளங்களில் 15 பேருக்கு மிகாமல் கலந்து கொள்வதற்கும், உடற்பயிற்சிக் கூடங்கள் 50% பேருடன் செயல்படவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் சினிமா அரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |