Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதனால முன் விரோதமா…? விவசாயிக்கு ஏற்பட்ட கொடூரம்… கோபத்தில் கொந்தளித்த குடும்பத்தினர்…!!

விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுலோசனா என்ற மனைவியும், கவியரசன் மற்றும் அரவிந்த் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணனின் மகளை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் கண்ணனின் குடும்பத்திற்கும், அஜித்குமாரின் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இதனை அடுத்து கண்ணன் சுலோச்சனா தம்பதிகள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல் நிலையத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அதன்பிறகு தினமும் அஜித் குமார் தனது சகோதரர்களுடன் மது அருந்திவிட்டு கண்ணனின் வீட்டிற்கே சென்று தகாத வார்த்தைகளால் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜுலை 11 ஆம் தேதியன்று கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் மீன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கண்ணனை வழிமறித்த அஜித் குமார் மற்றும் அவரின் சகோதரர்கள் தகராறில் ஈடுபட்டதோடு, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் கண்ணனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கண்ணனை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தின் முன்பு கண்ணனின் உடலை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பரண்டான மணி மற்றும் துணை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கண்ணனின் குடும்பத்தினரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதன்பிறகு கண்ணனின் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித் குமார் மற்றும் அவரின் சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கொலை குற்றவாளியை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |