Categories
கிரிக்கெட் விளையாட்டு

2-வது டி20 போட்டி …. ஷபாலி , தீப்தி ஷர்மா அதிரடி …. இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 148 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 48 ரன்கள், ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்கள் மற்றும் தீப்தி ஷர்மா 24 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து  அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை பியூமெண்ட்  அரைசதம் அடித்து 59 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பூனம் ஷர்மா 2 விக்கெட்டும் , அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும்  வீழ்த்தினர். இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது.

Categories

Tech |