ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட ஆப்பிரிக்காவில் உள்ள சூடானின் கிழக்கு பகுதியில் அல்-அமீன் நகரத்தில் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நேற்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பயங்கரவாத நிகழ்விற்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.