கிணற்றில் தவறி விழுந்து 10 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற 10 – ஆம் வகுப்பு படித்துவரும் மகன் இருந்தான். இந்நிலையில் விக்னேஷ் கொட்டியாம்பூண்டி பகுதியில் வசிக்கும் அவரது சித்தப்பாவான சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அதன்பின்னர் உறவினர்கள் அனைவரும் விக்னேஷை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
இந்நிலையில் அவரது உறவினர்கள் விவசாயியான சக்கரபாணி என்பவரது கிணற்றில் சென்று பார்த்தபோது விக்னேஷ் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விக்னேஷின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிணற்றில் கால் கழுவுவதற்காக இறங்கிய போது விக்னேஷ் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.