Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த மழை…. மீன்பிடிக்க போலாம்னு பார்த்தோம்…. அதுக்குள்ள இப்படி ஆயிட்டு….!!

கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்லும் நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைவான பயணிகளே வந்து செல்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கன மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலின் அலை பல அடி உயரத்திற்கு எழுந்து வந்து பாறைகளில் மோதியவாறு  இருந்தது.

இதனையடுத்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்வதற்காக கட்டுமரங்களை கொண்டு தயாராக இருந்தபோது பலத்த காற்று வீசியதால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லாமல் திரும்பியதால் வள்ளங்களும், கட்டுமரங்களும் கடற்கரையின்  மேடான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |