குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்ட் தொடங்கி வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “பெண்கள் உதவி மையம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, கிரைம் சைபர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் பல காவல் துறையினர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர் பேசியபோது இந்தப் பெண்கள் உதவி மைய திட்டத்தில் பணியாற்றுவதற்காக 40 பெண் காவல்துறையினர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர்களுக்கு 20 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 மடிக்கணினிகள் வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை, மானபங்கம் படுத்துதல், பாலியல் தொல்லை, குழந்தைகள் திருமணம், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் மற்றும் குழந்தைகளை தாக்குதல் ஆகியோரின் மீதும் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய இலவச எண்கள் 1098 மற்றும் 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த பெண்கள் உதவி நல மையம் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பொதுமக்களில் யாரேனும் இந்த இலவச எண்களில் தொடர்பு கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரியப்படுத்தினால் உடனடியாக அதற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள். மேலும் அந்த குற்றத்திற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயப்படாமல் இந்த எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.