தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூன் மூன்றாம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதனால் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் ஏரி, குளங்கள் மற்றும் அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நீலகிரி கோவை தேனி மாவட்டங்களில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.