தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என பக்தர்களுக்கு சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதையடுத்து பல தளர்வுகளை அறிவித்திருந்தது. கோவில்கள், பிரார்த்தனைக் கூட்டங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் சபரிமலையில் மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில், வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறக்கப்படவுள்ளது. அதேநேரம் கோயிலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ், கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.