உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை, மானியம் கிடையாது என மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உத்திர பிரதேச மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதாவின் வரைவு படி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதில் இருந்தும் அல்லது எந்த ஒரு அரசாங்க மானியத்தையும் பெறுவதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் நான்கு பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்:
இரண்டு குழந்தைகளை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு கிடைக்கும். மகப்பேறு விடுப்பு, 12 மாதங்கள், முழு சம்பளம் மற்றும் அலவன்ஸ் மற்றும் தேசிய ஓய்வு திட்டத்தின் கீழ் பங்களிப்பு போன்றவை கிடைக்கும். ஒரே குழந்தையுடன் நிறுத்தி கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் சில சலுகைகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.