7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நேரு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் நேரு அப்பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேருவின் மீது தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக நேருவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.