நாமக்கல் மாவட்டத்தில் தனிக்குடித்தனம் அழைத்த மனைவியை கொலை செய்து நடமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பெத்தனூர் பகுதியில் கபிலேஷ்ராஜன்(27) என்பவர் வசித்தது வந்துள்ளார். இவர் கரூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 1 1/2 ஆண்டிற்கு முன்பு கபிலேஷ்க்கு திருப்பூரை சேர்ந்த சீனிவாசன் என்பவற்றின் மகளான சர்மிளாதேவியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு சஜாஜோனிகா என்ற 8 மாத குழந்தை உள்ளது. இதனையடுத்து கடந்த 6ஆம் தேதி சர்மிளா வீட்டின் அறையில் கையில் ரத்த காயங்களுடன் பேச்சு மூச்சின்றி காணப்பட்டுள்ளார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மாமியார் சுசீலா உடனடியாக பரமத்திவேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சர்மிளா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த சர்மிளாவிந்தந்தி சீனிவாசன் என் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் துணைசூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் சந்தேகத்தில்பெரில் கபிலேசை பிடித்து விசாரணை நடத்தியதில் உண்மை சம்பவங்கள் தெரிய வந்துள்ளது.
அதன்படி கபிலேஷ்க்கும் சர்மிளாவிற்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி கருத்துவேறுபாடு காரமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி சர்மிளா நாம் தனிக்குடித்தனம் போகலாம் என கபிலேஷிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்த நிலையில் மறுபடியும் இவர்களுக்குள் சண்டை தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆத்திரமடைந்த கபிலேஷ் மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார்.
அப்போது அடுத்த நாள் காலையில் தூங்கி கொண்டிருந்த சர்மிளாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியுள்ளார். மேலும் சர்மிளாவின் கையில் கத்தியால் வெட்டியதை அடுத்து அவரின் செல்போனிலிருந்து தனிகுடித்தனத்திற்கு ஒத்துக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்துவிடுவேன் என சர்மிளா கூறியது போல் செய்தியை கபிலேஷ் அவரது செல்போனுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கபிலேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.