ஹைதி அதிபர் ஜோவெனால் மாய்சே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கரீபியன் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. இந்த சம்பவத்தை ஓய்வு பெற்ற கொலம்பிய ராணுவ வீரர்கள் 26 பேர் மற்றும் 2 அமெரிக்க வீரர்கள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஹைதி அதிபரின் படுகொலை சம்பவத்திற்கு ஓமன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த கண்டன அறிக்கையில் “ஹைதி அதிபர் சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் கொடூரமான சம்பவம் ஆகும். ஹைதி நாட்டு மக்களுக்கு ஓமன் அரசு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.