Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

33 சப்-இன்ஸ்பெக்டர்கள்…. மாவட்டத்திற்குள் இடமாற்றம்…. போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவு….!!

போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் 33 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்க்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்னர். இதுகுறித்த விவரம் பின்வருமாறு, கோட்டார் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சரவணக்குமார்,  கீரிப்பாறை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் வேலைபார்த்த சின்னத்தம்பி களியக்காவிளை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி இரணியல் காவல் நிலையத்திற்கும், சோபனராஜ் நித்திரையிலிருந்து கருங்கலுக்கும், மோகன அய்யர் கருங்கலில் இருந்து கொல்லங்கோட்டிற்கும், ரசல்ராஜ் தக்கலையிலிருந்து கன்னியாகுமரிக்கும், ஞானசிகாமணி இரணியலில்  இருந்து நித்திரவிளைக்கும், ரகு பாலாஜி களியக்காவிளையில் இருந்து ஈத்தாமொழிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இவர்கள் உட்பட 33 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பத்ரிநாராயணன் உத்தரவின்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |