தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பல சிறப்பான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்ப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தும் வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு விரைவாக வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.