உலகிலேயே மிக உயர்ந்த விலை கொண்ட திராட்சைப்பழம் எது என்பது பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் விளைவிக்கப்படும் பழங்கள் எல்லாம் சற்று விலை குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்தியாவிலேயே விளைவிக்கப்பட்டு அங்கேயே விற்பனையாகி வருகின்றது. ஆனால் இந்தியாவில் கூட சில லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் பழங்கள் இருக்கின்றது. சமீபத்தில் மாம்பழம் ஒன்று அதிக விலைக்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து அரியவகை திராட்சைப்பழம் ஒன்று அதிக விலைக்கு விற்பனையாகிறது. இது ரோமன் கிரேப்ஸ் என்று அழைக்கப்படும் வகையைச் சார்ந்தது.
இது இந்தியாவிலேயே மிக அரிய வகை திராட்சை. இந்த திராட்சை பழங்கள் குறைந்த அளவு உற்பத்தி செய்யப்படுகின்றது. அதாவது இந்த ரக திராட்சை பலன்கள் மொத்தமே ஒரு ஆண்டிற்கு 2400 கொத்துதான் உற்பத்தி ஆகின்றது. குறைவான உற்பத்தி மட்டுமல்லாமல், இந்த ரக திராட்சையை உருவாக்குவதற்கு 14 ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் இதற்கு விலை அதிகம். இந்த ரக திராட்சைகள் ஒரு கிலோ தற்போதைய மார்க்கெட் விலை 75 லட்சத்திற்கு விற்பனை ஆகிறது.
அதாவது ஒரு திராட்சைப்பழம் 35 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. ஒரு திராட்சை பழம் சுமார் 20 கிராம் எடை கொண்டதாக இருக்கும். தற்போது விளைச்சல் முடிந்து விற்பனைக்கு தயாராகி வருகின்றது. இதனை யார் வாங்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.