Categories
உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் நல்ல ரிசல்ட்.. WHO-ன் தலைமை ஆய்வாளர் தகவல்..!!

உலக சுகாதார அமைப்பினுடைய தலைமை ஆய்வாளரான சௌமியா சுவாமிநாதன், பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் நிலையின் பரிசோதனைக்கான முடிவுகள் வெளியானது. இதில் கொரோனாவை  எதிர்த்து 77.8% செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்டா வைரஸை எதிர்த்து 65.2% செயல் திறன் கொண்டிருக்கிறது.

மேலும் நாடு முழுவதும் சுமார் 25 நகர்களில் கொரோனாவால் பாதிப்படைந்த 130 நபர்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பின்பு தான் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பினுடைய தலைமை ஆய்வாளரான சௌமியா சுவாமிநாதன் என்பவர் கூறுகையில், கொரோனோவை எதிர்த்து கோவாக்சின் தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருப்பதாக கூறினார். மேலும் நாட்டில் 70 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

Categories

Tech |