கணவன் மனைவிக்கு செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது உள்ள இளம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்லாமல் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட டைவர்ஸ் என்று கூறி நீதிமன்ற வாசலில் சென்று நிற்கின்றனர். ஒரு சிலர் விஷம் குடித்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்பது எப்பொழுதும் பிரச்சனைக்கு தீர்வாக அமையாது.
மதுரை திருப்பரங்குன்றம் கப்பலூர் என்ற பகுதியில் மனைவிக்கு கணவன் செல்போன் வாங்கித் தராத காரணத்தினால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்த 17 வயதான மனைவி டிக்கினி சிங் என்பவர் கணவனிடம் கடந்த சில நாட்களாக புது செல்போன் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் சிறிது நாட்கள் கழித்து வாங்கி தருவதாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் செல்போன் வாங்கி தரவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.