சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். அப்போது தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் வருகையின்போது “ஒற்றை தலைமை ஓபிஎஸ்” என்று முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்களும் அவருக்காக முழக்கமிட இருவருக்குள்ளும் மோதல் உருவாகியுள்ளது.
இரு தொண்டர்களும் தற்போது ஒற்றை தலைமை வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் அதிமுகவில் பிளவு ஏற்படுமோ? என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஏற்கனவே சசிகலா தொண்டர்களுடன் அதிமுகவை காப்பாற்ற வருவேன் என்று பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.