கனடாவில் பெற்ற குழந்தையை கடத்தி தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா வின்னிபெக்கில் கத்தியை காட்டி தாயின் கையில் இருந்த குழந்தையை மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்து குழந்தையின் தாய் புகார் அளித்த நிலையில் 15 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் கத்தி காயங்களுடன் காருக்குள் இருந்த குழந்தையை கண்டறிந்தனர். ஆனால் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் குழந்தையின் தந்தை தான் குழந்தையை கடத்தினார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையின் தாயும், தந்தையும் சிறிது காலம் குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அதன் பிறகு இருவருக்கும் மனம் ஒத்துப் போகாமல் பிரிந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே குழந்தை எதற்காக கொல்லப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.