மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழவயல் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்றபோது எஸ்.புதூர் மின்வாரிய அலுவலகம் அருகில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ராஜாங்கம் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னமராவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.