Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது திடீரென அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து மற்ற 2 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திருமலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், கவுனரர்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரும் தப்பி ஓடியவர் திருமலைகுடியைச் சேர்ந்த சிவா என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் கரிசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி என்பவரது வீட்டில் நுழைந்து ஆட்டை  திருடிக் கொண்டு வந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பி ஓடிய சிவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |