Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகை, பணத்தை காணும்…. வீடு புகுந்து கைவரிசை காட்டிய திருடன்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகன் தனது வீட்டில் 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நகைகள் வைத்திருந்தார். ஆனால் திடீரென முருகன் பார்த்த போது நகை, பணம் திருட்டு போயிருந்தது. இதனை கண்டு பதற்றமடைந்த முருகன் காவல்நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் வண்ணார்பேட்டை பகுதியில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். அவர் நாங்குநேரி பகுதியில் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது அய்யாசாமி முருகனின் வீட்டுக்குள் நைசாக நுழைந்து அவர் வைத்திருந்த பணம், நகைகளை திருடி சென்றதாக குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  அய்யாசாமியை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த பணம், நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

Categories

Tech |