கோழி பண்ணைக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினர் காட்டில் கொண்டு விட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நாகப்பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து அரவிந்த் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் பதுங்கியிருந்த 4 அடி நாகப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது .