விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு பிகில் படம் போட்டுக் கொடுத்து சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கணேசபுரம் பகுதியில் சசிவர்ஷன் (வயது 10) தனது மாமாவான அரவிந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் தூக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அச்சிறுவன் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்கள் தவித்து நின்றனர். அப்போது அங்கு இரவு நேரத்தில் பணியாற்றும் தன்னார்வலரான ஜின்னா என்பவர் சிறுவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு அவனிடம் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தை செல்போனில் போட்டு கையில் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சசிவர்ஷன் படத்தை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர்கள் துள்ளியமாக சிகிச்சை அளித்து சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.