திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 காவல் துறையினருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நச்சுமேடு மலைப்பகுதியில் ஆரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா போன்றோர் கடந்த மாதம் 9-தேதி சாராய வேட்டைக்கு சென்றபோது அங்கு பூட்டி இருந்த 2 வீடுகளின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து 8 லட்சம் ரூபாய் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து நச்சுமேடு மலைகிராம மக்கள் அரியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரின்படி பட்டப்பகலில் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களை கைதுசெய்து மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இவ்வாறு சிறைச்சாலையில் சுமார் ஒரு மாதம் 3 பேரும் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கோரி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் (ஜே.எம்-1) மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு முகிலாம்பிகை 3 பேருக்கும் நிபந்தனையற்ற ஜாமீன் கொடுப்பதற்கு உத்தரவிட்டார்.