Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலையும் விட்டு வைக்கல… சிறுவன் உட்பட 4 பேர்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கோவில் நகைகளை கொள்ளையடித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அழகுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் கடத்த 6ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கோவின் கதவை உடைத்து உள்ளே இருந்த 4 1/4 பவுன் தங்க நகைகள், 2 3/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில் தாமரைக்குளத்தை சேர்ந்த பிரதாப் சிங்(23), அழகர்சாமிபுரம் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(23), புவனேஸ்வரன்(22) மற்றும் 18 வயது சிறுவன் ஐயா 4 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவத்துறையினர் அவர்களை நேற்று கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ஒலிபெருக்கி ஆகியவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு சூப்பிரண்டு அதிகாரி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |