Categories
கால் பந்து விளையாட்டு

யூரோ கோப்பை கால்பந்து : 55 வருடங்களுக்கு பிறகு சாதனை ….! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து…!!!

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்கை வீழ்த்தி இங்கிலாந்துஅணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் லண்டனில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள  இத்தாலி அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்நிலையில் இன்று  நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – டென்மார்க் அணிகள் மோதிக்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடி ஆட்டத்தை காட்டியதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் போட்டியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் எடுத்து சமனில் இருந்ததால் ,கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இதில் பெனால்டி கிக்கை டென்மார்க் அணி கோல் கீப்பர் தடுக்க முயற்சித்த போது, இங்கிலாந்து அணி வீரர்  ஹாரி கேன் திரும்பி வந்த பந்தை கோலாக மாற்றியதால் இறுதியாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த 55 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி மிகப் பெரிய கால்பந்து தொடரில் இறுதிக் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதனால் இந்த வெற்றியை இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகமாக  கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) கோப்பைக்கான இறுதிப் போட்டி வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இத்தாலி – இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன.

Categories

Tech |