பிகார் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 100 பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தை சேர்ந்த குத்துவான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட நூறுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும் பொழுது தங்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை நாங்கள் சாப்பிட்டோம். முதலில் எங்களது குழந்தைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பிரசாதம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு வயிற்றுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எங்களுக்கும் உடல் நிலை சரியில்லாமல் போனது. அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.