Categories
சினிமா தமிழ் சினிமா

‘மோகன்தாஸ்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… கேக் வெட்டி நன்றி சொன்ன படக்குழு…!!!

மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மோகன்தாஸ் படத்தை இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் இந்திரஜித் சுகுமாரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இந்நிலையில் மோகன்தாஸ் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |