பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.
இதையடுத்து இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த அமைச்சரவை பட்டியலில் மூத்த வழக்கறிஞர்கள், முன்னாள் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், ஐந்து பொறியாளர்கள் என மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர். மாஸ்டர் பிளான்களுடன் புதிய அமைச்சர்களின் பட்டியலை மோடி தயாரித்து உள்ளதாக கூறப்படுகின்றது.