Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி வீரர்களுக்கு …. 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி ….!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய  அணி வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது .

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்துக்கு வருவதற்கு  முன் கொரோனா  தடுப்பூசியின்  முதல் டோஸை  போட்டுக்கொண்டனர். அதன்பிறகு வீரர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்துவது முடிந்தபிறகு இங்கிலாந்திற்கு சென்றனர்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு 2-வது டோஸ் கொரோனா  தடுப்பூசி இந்த வாரத்திற்குள் செலுத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் கூறும்போது, ‘இந்திய வீரர்களில் கோவிஷீல்டு  கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்  போட்டுக்கொண்ட அனைவரும் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அனைவரும் தயாராக உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்  பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் மற்றும் 4  நிர்வாக ஊழியர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பாதுகாப்பு நெறிமுறையில் ஏதேனும் மாற்றம் செய்தால் எங்களுக்கு கண்டிப்பாக தகவல் தெரிவிப்பார்கள் என்றும் ,அதன்படி உடனடியாக பின்பற்றப்படும் “என்றார். இந்நிலையில் விடுமுறை நாட்களை  தங்கள் குடும்பத்தினருடன் கழித்து  கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு 17-ஆம் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்படும்  என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |