ராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையின் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து கட்சியின் தலைமை கழக பேச்சாளர் தாகா புகாரி, மனிதநேய மக்கள் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சரீப், தி.மு.க. தெற்கு நகர் செயலாளர் பிரவீன் தங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் முருகபூபதி, த.மு.மு.க. மாநில செயலாளர் சலிமுல்லாகான், மாவட்ட பொருளாளர் ஹமீது சபிக் உள்பட பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் மாட்டுவண்டியில் கேஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்தை ஏற்றி சாலைகளில் ஊர்வலமாக சென்று மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.