Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மீண்டும் தொடங்கப்பட்ட ஆதார் சேவை…. அதிகாரியின் தகவல்….!!

வேலூரில் தபால் நிலையத்தில் மீண்டும் ஆதார் சேவையானது இயக்கப்பட்டு வருவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு, சோழவரம், சி.எம்.சி. மருத்துவமனை, லத்தேரி, காந்திநகர், குருவராஜபாளையம், காட்பாடி, ஒடுக்கத்தூர், தொரப்பாடி, ஓசூர், சைதாப்பேட்டை, போன்ற பல்வேறு இடங்களில் ஆதார் சேவை கொடுக்கப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அரசு அறிவித்துள்ள தளர்வின்படி மீண்டும் ஆதார் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |