முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக தர்மராஜ் மணிகண்டன் ஆகிய இரண்டு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த தர்மராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை வெட்டினார். இதில் பலத்தகாயமடைந்த மணிகண்டனை அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து மணிகண்டனின் தாயார் கொடுத்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்