திருவண்ணாமலையில் போட்டியிடுவதற்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயராமன், ரகோத்தமன் ஆகியோர் தேர்தலை சாதகமாக வைத்துக்கொண்டு, தங்களது சித்தப்பா மகள் வசந்திக்கு திருவண்ணாமலையில் போட்டியிடுவதற்கு சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூபாய் 50 லட்சம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஆனால் தேர்தலில் கடைசிவரை போட்டியிடுவதற்கு எம்எல்ஏ சீட்டு வாங்கித் தரவே இல்லை. இதனால் அவர்கள் பாஜக பிரமுகரிடம் சென்று தாங்கள் வழங்கிய பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பணம் செலவாகி விட்டதாகவும் அதை திரும்ப தர முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் கணவர் புவனேஷ் குமார் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.