உத்திரப் பிரதேச மாநிலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடுத்பத்தினருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டு காதலனுடன் சிறுமி தப்பி ஓடிவிட்டார்.
உத்திரப் பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். 18 கூட ஆகாத அந்தப் பெண்ணின் காதலை பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கடந்த ஆண்டு தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காதலனான அரவிந்த் குமார் மீது பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரவிந்த் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
அதன் பிறகு அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்ற அரவிந்த் குமார் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி விட்டுச் சென்றார். இந்த நிலையில் அந்த சிறுமி தனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனது அப்பா, அம்மா, அண்ணன்கள், இரண்டு சகோதரிகள் மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் ஆகியோருக்கு விஷம் வைத்துக் கொள்ள முடிவு செய்து, ரகசியமாக யாருக்கும் தெரியாமல் வாங்கிய விஷத்தை சாப்பாட்டில் கலந்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாது போல இருந்துள்ளார். அவர் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைவருமே மயங்கி விழுந்துள்ளனர். பின்னர் சத்தம் போடாமல் தனது காதலனுடன் அந்த சிறுமி அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதையடுத்து தற்செயலாக வீட்டின் அருகே வந்த ஒரு நபர் குடும்பத்தினர் அனைவரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். மருத்துமனையில் சிகிச்சை செய்து பார்த்தபோது சாப்பாட்டில் உணவு உணவில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. 2 பேர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதையடுத்து சிறுமியையும் காதலனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதலுக்காக தனது குடும்பத்தினரையும் சேமித்துக் கொள்ள முயன்ற சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.