Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கணும் …. விலை உயர்வை கண்டித்து …. தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  தேமுதிக கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக கட்சியினர் சார்பில் நேற்று திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து மாவட்ட அவைத் தலைவர் சரவணன் ,மாவட்ட துணை செயலாளர்  புஜ்ஜி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து உள்ளனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைச் செயலாளரான பார்த்தசாரதி உட்பட தேமுதிக கட்சியினர் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |