பிரிட்டன் மக்களுக்கு, ஜெர்மனியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரத்திலிருந்து தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் அவர்கள் புதன்கிழமையிலிருந்து தனிமைப்படுத்துதலின்றி ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் 5 நாட்கள் கழித்து அவர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்றால், பத்து நாட்கள் தனிமைப்படுத்துவது குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் மஞ்சள் பட்டியலில் ஜெர்மன் இருக்கிறது. எனவே ஜெர்மன் மக்கள் பிரிட்டன் வந்தால் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதே போன்று ஐந்து நாட்கள் கழித்து பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று வந்த பிறகு தனிமைப்படுத்துதல் அவசியமில்லை. கடந்த வாரத்தில் ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், சந்தித்து பேசினார்கள் அதன்பின்பு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது.