காஸ்பியன் கடலில் இருந்து திடீரென்று வானளவு திடீரென்று வெடித்து கிளம்பிய மர்ம தீ கோளம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றது.
அசர்பைஜான் கடற்பகுதியில் இரவு நேரத்தில் கடலுக்கடியில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பில் திடீரென்று மர்ம தீ கோளம் வானளவு உயர்ந்து எரிந்துகொண்டிருந்தது. இந்த மர்ம தீ கோளம் குறித்து அந்நாட்டு அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமூக வலைத்தளத்தில்கடலில் உள்ள எண்ணெய் கப்பல் ஏதேனும் வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள அசர்பைஜான் காஸ்பியன் கப்பல் நிறுவனம் எண்ணெய் கப்பல்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ,கடலுக்கடியில் உள்ள கனன்று கொண்டிருந்த எரிமலை வெடித்து இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து அசர்பைஜான் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் நிகழ்ந்தபோது காஸ்பியன் கடலில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் விபத்து ஏற்பட்டதாக பதிவாகவில்லை. மேலும் இந்த மர்ம தீ கோளத்தால் சுமித் எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அங்கு வழக்கம்போல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்’ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இந்த மர்ம தீ கோளம் எரிமலை வெடிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் கடலுக்கடியில் இந்த மர்ம தீ கோளம் வெடிப்பு நிகழ்ந்த அதே நேரத்தில் பெய்லாகன் பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறுகின்றனர்.