Categories
சினிமா தமிழ் சினிமா

‘செம்மையா இருக்கு’… கவினை பாராட்டிய விஜய்… எதற்காக தெரியுமா?…!!!

பீஸ்ட் பட பூஜையின் போது நடிகர் விஜய் தனது ‘அஸ்கு மாரோ’ பாடலை பாராட்டியதாக கவின் தெரிவித்துள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். இதையடுத்து இவர் நட்புனா என்னானு தெரியுமா, சத்ரியன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதன்பின் கவின் பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது நடிகர் கவின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கவின் பீஸ்ட் பட பூஜையில் கலந்து கொண்ட போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து குக் வித் கோமாளி பிரபலங்கள் புகழ், சக்தி ஆகியோரிடம் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் படக்குழுவினர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகினார் என்றும், தனது நடிப்பில் வெளியான அஸ்கு மாரோ ஆல்பம் பாடலை பார்த்து ‘செம்மையா இருக்கு’ என விஜய் பாராட்டியதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் கவின் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |