அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வாஷிங்டன் டிசி மேயர் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
அமெரிக்காவில் கடந்த 4-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பாலிசேட் அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் வாஷிங்டன் டிசி மேயர் Muriel Bowser பங்கேற்றார். இந்நிலையில் Muriel Bowser தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியில் நடந்த பாலிசேட் அணிவகுப்பு புகைப்படத்தை பதிவிட்டார் .
ஆனால் அந்த புகைப்படத்தோடு நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாத 3 புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் பதிவிட்ட 4 புகைப்படங்களில் 2 அணிவகுப்பு புகைப்படமும், பாடகர் தி வீக்கெண்ட ,டோஜா கேட் ஆகியோரின் புகைப்படம் மற்றும் கார்ட்டூன் புகைப்படம் இருந்ததால் இந்த பதிவு உடனே நீக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய மேயர் Muriel Bowser ட்விட்டர் பதிவு அட்மின் வேலையாகத்தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்