Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவையெல்லாம் கண்டித்து…. நடைபெற்ற போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க. கட்சியினர்  சார்பாக போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மின்சார நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மதுபான கடைகள் திறப்பு போன்றவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பாக தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பயாஸ்பாஷா தலைமை வகித்தார். மேலும் நகர செயலாளர் என்.சேட்டு, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சரவணன், செந்தில்குமார், கண்ணன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தை விவசாய அணி துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் எம்.கே அரிகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தப் போராட்டத்தில் எம்.கே செந்தில்குமார், அலிஜான் ஏலகிரி ரவி, நாகராஜ் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |