பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் முன்பு தே.மு.தி.க கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமையில், கட்சியின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் நடராஜன், நகரச் செயலாளர் சதீஷ், ஒன்றிய செயலாளர் திருமுருகன், மாநில நிர்வாகி முத்தையா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.