12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் மீதமிருந்த கட்டிடத்தையும் தரைமட்டமாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டில் மியாமியில் கடந்த சில தினங்களுக்கு முன் 12 மாடிக் குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மீட்பு பணியின் இடிபாடுகளில் உள்ள கட்டிடத்தை உடைக்கும்போது மீதமிருந்த கட்டிடமும் சரிந்து விழும் நிலையில் இருந்ததால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டது .
இதுவரை இந்த கட்டிட விபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த 24 பேரின் உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 127 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ப்ளோரிடாவில் எல்சா புயல் தாக்கம் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது . இதனால் மீட்புப் பணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மீதமுள்ள கட்டிடங்களுக்கு குண்டுவைத்து அதிகாரிகளை தரைமட்டமாக்கினர்.இந்த கட்டிடத்தை தரைமட்டமாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது .