திடீரென மாயமான இந்திய ராணுவ அதிகாரி சோலிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததிலிருந்து தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்களும் தீவிரவாத அச்சுறுத்தலை மென்மேலும் இந்திய மக்களிடையே அதிகப்படுத்தியது. இந்நிலையில் காங்கோ நாட்டின் ஐ.நா அமைதிகாக்கும் படையில் இருந்த இந்திய ராணுவ அதிகாரியை காணவில்லை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கயங்கியா ஏரி பகுதிக்கு சென்ற ராணுவ அதிகாரி சோலிங் திடீரென மாயமாகி இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இதையடுத்து .ராணுவ அதிகாரி சோலிங்கை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.