Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸே இப்படி பண்ணலாமா… வரதட்சணை கேட்டு கொடுமை… பெண் உட்பட 3 பேர் படுகாயம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறில் பெண் உட்பட 3 பேரை கத்தியால் குத்திய காவல்துறை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள பொன்னன்படுகை பகுதியில் சிவராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மயிலாடும்பாறையில் வசிக்கும் ஜெயசுதா(23) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு கவிமித்ரன்(1) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் திருமணமான 1 வருடத்திலிருந்தே ஜெயசுதாவை அவரது கணவன் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதனால் ஜெயசுதா கடந்த மாதம் மனமுடைந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயசுதா பெற்றோர் அவரை சமாதானப்படுத்த கணவருடன் சேர்ந்து வாழுமாறு ஆறுதல் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஜெயசுதாவை கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அப்போது ஜெயசுதாவுடன் அவரது உறவினர்களான சண்முகராணி, செல்லப்பாண்டி, மதியழகன் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் சிவராஜா மற்றும் அவரது பெற்றோர் ஜெயசுதாவை வீட்டிற்குள் விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆத்திரமடைந்த சிவராஜா அவர் வைத்திருந்த கத்தியால் ஜெயசுதாவின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சண்முகராணி உட்பட உடன் வந்த 3 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு தேனி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சண்முகராணி மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது மட்டுமல்லாமல் கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக சிவராஜாவை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |