தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற யூடியூப் சேனல் என்ற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது.
கிராமத்து மண்வாசம் நிறைந்து சமைக்கும் இவர்கள் புதுக்கோட்டை கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். இவர்கள் முதல்முறையாக அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி 2018 ஆம் ஆண்டு தங்களது யூடியூப் சேனலை தொடங்கினார்கள். சேனல் தொடங்கும்போது இவர்கள் கூறியதாவது ஆறுமாதம் விவசாயம் செய்யும் நாங்கள், மீதமுள்ள ஆறு மாதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தோம். இந்த அளவிற்கு நாங்கள் வளர்வோம் என்று எண்ணிப் பார்த்ததே கிடையாது.
நாங்கள் எந்த பொடியையும் கடையில் வாங்கி சமைக்க மாட்டோம். அனைத்தையும் அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆகியவற்றில் அரைத்து அவற்றை சேர்த்து சமையல் செய்வோம். செய்த உணவுகளை ஆதரவற்ற இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு சென்று கொடுப்போம் என தெரிவித்து இருந்தனர். இப்படி ஜீரோ சப்ஸ்கிரைபரில் ஆரம்பித்த இவர்கள் இரண்டு வருடங்களிலேயே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன. தமிழகம் வந்த ராகுல்காந்தி இவர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணி செய்து சாப்பிட்டது இவர்களின் யூடியூப் சேனல்களுக்கு மேலும் பெருமையைத் தேடித் தந்தது. தென்னிந்தியாவில் ஒரு கோடி சப்ஸ்கிரிபர் பெற்ற பெருமையை இந்த யூடியூப் சேனல் பெறுவது மகிழ்ச்சியை அளிக்கின்றது.