Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலி தங்க நகைகளை விற்று …. கடைக்காரரை ஏமாற்றிய 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!!

போலி தங்க நகைகளை விற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட       4 பேரை  போலீசார் கைது செய்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் கொண்டமாபுரம் தெருவை சேர்ந்த விமல்சந்த் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதியன்று வடமாநிலத்தை சேர்ந்த          2 பெண்கள் இவருடைய கடைக்கு வந்து 8 கிராம் பழைய நகையை விற்று புதிய 8 கிராம் தங்க நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதியன்று அதே இரண்டு பெண்கள் 14 கிராம் எடைகொண்ட பிரேஸ்லெட்டை  விற்று அதே எடைக்கு புதிய  நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் வட மாநில பெண்கள் கொடுத்த பழைய நகைகளை விமல்சந்த் உருக்கி பார்த்தபோது அந்த நகைகள் போலியானது என தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமாரின் உத்தரவின்படி,துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், டவுன் போலீஸ்  இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை விற்று மோசடி செய்து தப்பிச்சென்ற பெண்களை பிடிக்க திட்டமிட்டனர். இந்நிலையில் தப்பிச் சென்ற பெண்கள் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மோசடியில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மான்சி (40), சோனி குப்தா (30)மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த கமலேஷ் (40), நிர்மல் குமார்(41) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |