Categories
உலக செய்திகள்

19 பேரை காணோம்..! பிரபல நாட்டில் ஏற்பட்ட பயங்கரம்… அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 19 பேர் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் சில பகுதிகளில் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்த பருவமழை காரணமாக கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து டோக்கியோவின் மேற்கே பயங்கர மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் குடியிருப்புகள் டசின் கணக்கில் புதைந்து போனதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நில சரிவில் 19 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேசமயம் நிபுணர்கள் தரப்பில் இதேபோல் தொடர்ந்து மண் சரிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மீட்புக்குழுவினர், தற்காப்பு வீரர்கள், காவல்துறையினர் என பலரும் பாதிப்புக்குள்ளான Atami பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |